என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவில் பிக் பாஷ் கிரிக்கெட்: அதுவும் சென்னையில்..! பேச்சுவார்த்தை நடத்திய ஆஸ்திரேலியா
- சென்னையில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
- இந்தியா கிரிக்கெட்டுக்கான லாபகரமான சந்தை என்பதால் முதலீட்டை ஈர்க்கும் வகையில் திட்டமிடுகிறது.
உலகளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கும் ஒன்று. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு மிகப்பெரிய லீக் தொடராக விளங்குகிறது.
இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2011-ல் இருந்து பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமுள்ள அதிகமான ரசிகர்கள் மற்றும் மிகப்பெரிய லாபகரமான சந்தையை கொண்ட இந்தியாவில் ஒரு போட்டியை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் விரும்புகிறது. அந்த போட்டியை சென்னையில் நடத்த விரும்புகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கிரிக்கெட்டின் தலைமை பிசிசிஐ. பிசிசிஐ சம்மதம் தெரிவித்தால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய கிரிக்கெட் சந்தையை கொண்ட இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பிக் பாஷ் லீக்கில் உள்ள 8 அணிகளில் 2 அணியின் உரிமையாளர்கள் அணியை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்த முடிவை எடுத்துள்ளது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்து்ளளது. இந்த அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2025-26 சீசனிலும் இந்த அணிதான் சாம்பியன்.






