என் மலர்
கிரிக்கெட் (Cricket)

IND Vs AUS ஒருநாள் போட்டி: ODI கிரிக்கெட்டில் அறிமுகமானார் நிதிஷ் குமார் ரெட்டி
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் தடை பட்டது. பல மாதங்களுக்கு பின் விளையாடிய விராட் கோலி டக் அவுட்டும் ரோகித் சர்மா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமானார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அவரிடம் தொப்பியைக் கொடுத்து அணிக்கு வரவேற்றார்.
இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிச்சேல் ஓவன், மேத்யூ ரென்சா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.






