என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா
    X

    ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய தரப்பில் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் வெதரால்ட் களமிறங்கினர்.

    இதில் ஜேக் வெதரால்ட் 18 ரன்னிலும் டிராவிஸ் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து லெபுசென் மற்றும் கவாஜா ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் லெபுசென் ஆர்ச்சர் வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் டக் அவுட்டில் ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினார்.

    இதனையடுத்து கவாஜா- அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கவாஜா 82 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஜோஸ் இங்லீஸ் 32 ரன்னிலும் கம்மின்ஸ் 13 ரன்னிலும் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் போனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேரி சதம் அடித்து அசத்தினார். அவர் 106 ரன்னில் அவுட் ஆகினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டையும் ஹார்ஸ் மற்றும் வில் ஜக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×