என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிக்சரில் வித்தியாசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா
    X

    சிக்சரில் வித்தியாசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×