என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2வது ஒருநாள் போட்டி: கே.எல்.ராகுல் சதம்... நியூசிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
- பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்னிலும் சுப்மன் கில் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கோலி 23 ரன்னிலும் ஷ்ரேயாஸ் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
118 ரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 27 ரன்னில் ஜடேஜா அவுட்டாக பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.






