search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பும்ரா,  அஸ்வின்,  ஜடேஜா
    X
    பும்ரா, அஸ்வின், ஜடேஜா

    ஐ.சி.சி ஆல்-ரவுண்டர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 7-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

    இதில் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.  385 புள்ளிகளுடன் ஜடேஜா முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்  ஜாசன் ஹோல்டர் 357 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின் 2-வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர்.பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி 6 இடத்திற்கு முன்னேறினார். 

    மேலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். அதில் ரோகித் சர்மா 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். விராட் கோலி 9-வது இடத்திலும் ரிஷப் பாண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    Next Story
    ×