என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பிரசித் கிருஷ்ணா அபாரம் - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்9 Feb 2022 4:16 PM GMT (Updated: 9 Feb 2022 4:16 PM GMT)
இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன், 12 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அகமதாபாத்:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாலர்கள் அசத்தலாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஷமார் புரூக்ஸ் 44 ரன்னும், அகேல் ஹொசைன் 34 ரன்னும், ஷாய் ஹோப் 27 ரன்னும், ஒடியன் ஸ்மித் 24 ரன்னும் எடுத்தனர்.
இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட் எடுத்தனர்.
இதையும் படியுங்கள்...ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிப்பு: இதுதான் புதிய இந்தியாவா?- ராகுல் காந்தி விமர்சனம்
Next Story
×