search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பி.வி.சிந்து
    X
    பி.வி.சிந்து

    சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

    சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் கனிகா கன்வால், சமியா இமாத் பரூகி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    லக்னோ:

    சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 23-ம்  தேதி வரை நடக்கிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

    27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 - 9, 21 - 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×