search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அஜாஸ் படேல்
    X
    அஜாஸ் படேல்

    ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் அஜாஸ் படேல்

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 150 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் பந்துவீசிய அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

    கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஜிம் லேக்கர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

    அவரை தொடர்ந்து, 1999-ம் ஆண்டு இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனைப் பட்டியலில் மூன்றாவது வீரராக நியூசிலாந்தைச் சேர்ந்த அஜாஸ் படேலும் இணைந்துள்ளார்.

    Next Story
    ×