என் மலர்

  செய்திகள்

  ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா
  X
  ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா

  ராகுல் டிராவிட் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார் - கவுதம் கம்பீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
  ஜெய்ப்பூர்:

  இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

  முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். 

  கவுதம் கம்பீர் - ராகுல் டிராவிட்

  தற்போது அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன். அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும்.  அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்" என்று கவுதம் கம்பீர் கூறினார்.

  Next Story
  ×