என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோவக் ஜோகோவிச்
    X
    நோவக் ஜோகோவிச்

    விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்

    விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி என்பது குறிப்பிடத்தக்கது.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை விரட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மேட்டியோ பெரெட்டினி

    மற்றொரு அரையிறுதியில் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர்.
    Next Story
    ×