search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை விளாசும் ரெய்னா
    X
    பந்தை விளாசும் ரெய்னா

    டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

    அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
    மும்பை:

    ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    சாம் கர்ரன் பந்தை அடிக்கும் காட்சி

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.  அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 36 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் (நாட் அவுட்) அடித்தனர். 

    ரவீந்திர ஜடேஜா

    கேப்டன் டோனி ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார். அவரது பங்களிப்பால் அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. 

    டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அஷ்வின், டாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடுகிறது.
    Next Story
    ×