search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல்
    X
    கேஎல் ராகுல்

    இந்திய அணியில் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது - லோகேஷ் ராகுல்

    இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர் எனவும் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகவும் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

    புனே:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் புனேவில் தொடங்குகிறது.

    முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியை லோகேஷ் ராகுல் செய்தார். அவர் மேலும் 5-வது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 43 பந்தில் 62 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் விக்கெட் கீப்பிங் செய்தால் ரி‌ஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீங்கள் இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கும் வரை எப்போதும் போட்டி அதிகமாகவே இருக்கும். அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். இது ஒவ்வொருவரையும் சிறந்த விளங்க தூண்டுகோலாக இருக்கிறது. அணியில் உங்கள் இடத்தை நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்றால் உங்களால் வெளியே உட்கார முடியாது.

    இது ஒரு நல்ல வி‌ஷயம். எங்கள் அணி மிகவும் திறமை வாய்ந்தது. வீரர்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கிறார்கள். அணியில் ஒரு வீரராக நீங்கள் உங்களை ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிப்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

    ஒருநாள் போட்டியில் 5-வது வீராக களம் இறங்கியதால் 20 ஓவர் போட்டியில் செய்வதை (அதிரடி ஆட்டம்) விட இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருக்கலாம்.

    சிறிது நேரத்துக்கு ஓரிரு நல்ல ஷாட்டுகளை அடித்ததால் சிறப்பாக விளையாடி முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×