search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாஹல்
    X
    சாஹல்

    10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்புதான் விளையாடப் போகிறேன் என்பது தெரிந்தது: சாஹல்

    ஜடேஜாவுக்குப் பதிலாக கன்கசன் சப்ஸ்டிடியூட் வீரராக களம் இறங்கிய சாஹல் 3 விக்கெட் வீழ்த்தியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 161 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி 23 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

    கடைசி நேரத்தில் ஸ்டார்க் பந்தை ஜடேஜாவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்தார். இந்தியா இன்னிங்ஸ் முடிந்த பின் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சாஹல் பீல்டிங் செய்த வந்தார்.

    அப்போதுதான் ஜடேஜாவிற்கு சற்று மயக்கம் ஏற்படுவது போல் இருந்ததால், கன்கசன் சப்ஸ்டிடியூட் ஆக சாஹல் வந்துள்ளது. தெரிந்தது. ஒருநாள் போட்டியில் மோசமாக விளையாடியதால் கடைசி போட்டியில் இருநதும், இன்றைய போட்டியிலும் கழற்றி விடப்பட்டார். மாற்று வீரராக களம் இறங்கி அசத்தியுள்ளார்.

    இன்றைய போட்டியில் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு சற்று முன்புதான் விளையாட இருக்கிறேன் என்பது தெரியவந்தது என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘நாங்கள் பேட்டிங் செய்த பின்னர், விளையாட போகிறேன் என்று எனக்கு தெரிய வந்தது சிறந்த உணர்வு. நெருக்கடி ஏதும் இல்லை. நான் விளையாடுவேன் என்பது 10 முதல் 15 நிமிடத்திற்குள்தான் எனக்க தெரியவந்தது. 

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி செய்தி சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க சற்று கடினமாக இருந்தது. நான் என்னுடைய திட்டப்படி பந்து வீசினேன்’’ என்றார்.
    Next Story
    ×