search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடுவது மகிழ்ச்சி - ரோகித் சர்மா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது மகிழ்ச்சி என ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.

    விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார்.  அதே சமயம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்தினால் ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.  இதன்படி தீபாவளி பண்டிகை கழிந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 19ந்தேதி காலை சென்றார்.

    அவர் காயத்தில் இருந்து முழு அளவில் விடுபடுவதற்காக சென்றுள்ளார்.  இதில் 100 சதவீதம் குணம் அடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும்.  இதேபோன்று பி.சி.சி.ஐ. மருத்துவ குழுவும் ரோகித்தின் உடற்தகுதியை கண்காணிக்கும்.  அதுபற்றி அனைத்து இந்திய மூத்த தேர்வு குழுவுக்கும் விளக்கம் அளிக்கும் என பி.சி.சி.ஐ. அறிக்கை தெரிவித்தது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாத சூழலில், தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களம் இறங்குகிறார்.  இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது.  இதுபற்றி ரோகித் சர்மா கூறும்பொழுது, டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம்.

    எந்த வரிசையில் நான் விளையாட வேண்டும் என அணி விரும்புகிறதோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.  ஆனால், தொடக்க ஆட்டக்காரர் என்ற நிலையில் இருந்து அணி நிர்வாகம் என்னை மாற்றி விடுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

    விராட் விளையாடவில்லை என தெரிந்ததும், யார் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி ஆஸ்திரேலியாவில் முன்பே உள்ள அவர்களுக்கு (அணி நிர்வாகம்) யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்.  இன்னிங்சில் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் முடிவு செய்து வைத்திருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

    அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படி பேட்டிங் செய்ய தயாராகவே நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×