search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா
    X
    பும்ரா

    பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: குறைசொல்லும் விளையாட்டில் ஈடுபட விரும்பவில்லை- பும்ரா

    இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை வைத்து குறைசொல்லும் விளையாட்டில் ஈடபட விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இந்தியா 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அரைசதம் அடித்த பின், ஹனுமா விஹாரி மற்றும் புஜாரா தேவையில்லாமல் ஆட்டமிழந்தனர்.

    பும்ரா, ஷமி இணைந்து ஏழு விக்கெட்டுகள் வீழ்த்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஏழு ரன் முன்னிலையுடன் களம் இறங்கிய இந்தியா 2-வது இன்னிங்சில் இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 90 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் மீது பழியை போட்டி குறைகூறும் ஆட்டத்தை விளையாட விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லமாட்டோம். இது எங்கள் அணியின் பழக்கம். சில நேரம் எங்களால் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை என்றால், அது பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்காது.

    ஒரு அணியாக நாங்கள் கடினமாக முயற்சி செய்து வெற்றி பெற முயற்சிப்போம். ஆனால் சூழ்நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய இரண்டு பேட்ஸ்மேன்கள் (விஹாரி, ரிஷப் பண்ட்) களத்தில் உள்ளனர். அதனால் நாளை சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்ப முயற்சிப்போம்.

    நாங்கள் ஒரு அணியாக கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் விரும்பியதை விட இன்று அதிக விக்கெட்டுக்களை இழந்து விட்டோம். இருந்தாலும் குறைகூறும் விளையாட்டை விளையாட விரும்பவில்லை. ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட முயற்சி செய்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×