search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுரவ் கங்குலி
    X
    சவுரவ் கங்குலி

    பிசிசிஐ தலைவர் பதவியைவிட கிரிக்கெட்டர்தான் கஷ்டம்: சொல்கிறார் கங்குலி

    கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு ஒரு வாய்ப்புதான். இதனால் பிசிசிஐ தலைவர் பதவியை விட கிரிக்கெட்டர்தான் கஷ்டம் என கங்குலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் கேப்டனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.

    தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். இவரிடம் கிரிக்கெட்டராக இருப்பது கடினமா?, பிசிசிஐ தலைவராக இருப்பது கடினமா? என்ற கேள்வி கேட்டகப்பட்டது.

    அதற்கு சவுரவ் கங்குலி பதில் அளிக்கையில் ‘‘மிகவும் நெருக்கடியான நிலையில் விளையாடுவது மிகவும் கடினம். ஏனென்றால், பேட்டிங் செய்யும்போது ஒரு வாய்ப்புதான் இருக்கும். இதனால் மிகவும் கடினமானதாக இருக்கும். பிசிசிஐ தலைவராக இருக்கும் நான் தவறு செய்தால், அடுத்த முறை வந்து அதை சரி செய்து கொள்ளலாம்’’ என்றார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘2014-ல் சில மாதங்கள் நான் பிசிசிஐ தலைவராக இருந்துள்ளேன். உச்சநீதிமன்றம் பிசிசிஐ, ஐபிஎல் தலைவராக நியமித்தது. அந்த பணியை நான் சிறப்பாக செய்தேன். அந்த வேலை எளிதானது’’ என்றார்.
    Next Story
    ×