search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏபி டி வில்லியர்ஸ்
    X
    ஏபி டி வில்லியர்ஸ்

    பிக் பாஷ் டி20 லீக்கை பவுண்டரியுடன் சிறப்பாக தொடங்கிய ஏபி டி வில்லியர்ஸ்

    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் பிக் பாஷ் டி20 லீக்கை பவுண்டரியுடன் சிறப்பான வகையில் தொடங்கியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர். இதனால் அவரை 360 டிகிரி என்று அழைப்பர்.

    ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் நீண்ட காலகமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக், கரிபீயன் பிரிமீயர் லீக் போன்றவற்றில் விளையாடியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடாமல் இருந்தார்.

    தற்போது முதன்முறையாக 2019-2020 சீசனில் விளையாட பிரிஸ்பேன் ஹீட் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.

    அந்த அணி இன்று அடிலெய்டு ஸ்டிரைக்கர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அறிமுகம் ஆனார். முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 110 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களம் இறங்கியது. 17 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது ஹீட். 3-வது விக்கெட்டுக்கு ஏபி டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்.

    அறிமுக போட்டியின் முதல் பந்தில் என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டி20 உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷித் கான் வீசிய ஹூக்ளி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதன்மூலம் பவுண்டரியுடன் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விளையாடிய அவர் 32 பந்தில் ஐந்து பவுண்டரியுடன் 40 ரன்கள் விளாசினார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20-யில் அதிரடி பேட்ஸ்மேன் என்பதை ஏபி டி வில்லியர்ஸ் நிரூபித்துள்ளார்.
    Next Story
    ×