search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டு பிளிசிஸ்
    X
    டு பிளிசிஸ்

    புனே டெஸ்ட் போட்டி: மளமளவென விக்கெட்டுக்களை இழந்து ‘பாலோ-ஆன்’ நோக்கி தென்ஆப்பிரிக்கா

    புனேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் பாலோ-ஆன் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அவர் 336 பந்துகளில் 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அகர்வால் 195 பந்தில் 108 ரன்னும் (16 பவுண்டரி, 2 சிக்சர்) ரஹானே 59 ரன்னும், ஜடேஜா 104 பந்தில் 91 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ரபாடா 3 விக்கெட்டும். கேசவ் மகாராஜ், முத்துசாமி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்து இருந்தது.

    தொடக்க வீரர்கள் மார்கிராம் ரன் எதுவும் எடுக்காமலும், எல்கர் 6 ரன்னிலும் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர். பவுமா 8 ரன்னில் முகமது‌ ஷமி பந்தில் ‘அவுட்’ ஆனார். ப்ரூயின் 20 ரன்னும், நார்ஜே 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. 565 ரன்கள் பின் தங்கிய நிலையும் கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. நார்ஜே 3 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும் ப்ரூயின் 30 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் 53 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் டு பிளிசிஸ் - டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

    அணியின் ஸ்கோர் 128 ரன்னாக இருக்கும்போது டி காக் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முத்துசாமி 7 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய டு பிளிசிஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 64 ரன்கள் சேர்த்தார்.

    அஸ்வின்

    டு பிளிசிஸ் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 58.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர் - மகாராஜ் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஜோடி விக்கெட்டை இழக்காவண்ணம் விளையாடியது. இவர்களை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். இந்த ஜோடியின் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 84 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்துள்ளது. பாலோ-ஆன் தவிர்க்க இன்னும் 180 ரன்கள் தேவை என்பதால், அதை தவிர்க்க தென்ஆப்பிரிக்கா போராடி வருகிறது.
    Next Story
    ×