என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட் - பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை
Byமாலை மலர்6 April 2019 3:43 PM IST (Updated: 6 April 2019 7:43 PM IST)
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvKXIP
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார். டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தால் 38 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. டோனி 37 ரன்களுடனும், ராயுடு 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பஞ்சாப் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இறங்கினர்.
கெயிலை 5 ரன்னில் அவுட்டாக்கிய ஹர்பஜன் சிங், மயங்க் அகர்வாலை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற்றினார். ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
அதன் பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த சர்ப்ராஸ் கான் நிதானமாக ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர். 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 117 ஆக இருக்கும்போது ராகுல் 55 ரன்னில் வெளியேறினார். கடைசியில் சர்ப்ராஸ் கான் 67 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் ஹர்பஜன், குகலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvKXIP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X