search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை
    X

    ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னனான கிறிஸ் கெயில் 300 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். #IPL2019 #KXIPvMI #ChrisGayle
    8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கிறிஸ் கெயில் அடித்த 4 சிக்சர்களுடன் அவர் ஐபிஎல் போட்டிகளில் 302 சிக்சர்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.115 போட்டிகளில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏபி டி வில்லியர்ஸ் 192 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 185 சிக்சர்களுடன் எம்.எஸ்.டோனி மூன்றாவது இடத்திலும் உள்ளார். #IPL2019 #KXIPvMI #ChrisGayle
    Next Story
    ×