search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான்
    X

    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான்

    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், குல்பதின் நயீப்பின் பேட்டிங், பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AFGvIRE #GulbadinNaib
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அரை சதமடித்த அவர் 89 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 37 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அயர்லாந்து அணி 49.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் தவ்லத் சட்ரான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்பதின் நயீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. மொகமது ஷசாத் 43 ரன்னிலும், ஹஸ்ரத்துல்லா ஷாஷை 25 ரன்னிலும், ரஹ்மத் ஷா 22 ரன்னிலும், குல்புதின் நயீப் 46 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE #GulbadinNaib
    Next Story
    ×