என் மலர்
செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா அதிரடி துவக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடி வரும் இந்திய துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். #NZvIND #TeamIndia
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66 ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டானார். #NZvIND #TeamIndia
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Next Story