என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல், பாண்டியா பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து- கோலி
Byமாலை மலர்11 Jan 2019 10:22 AM IST (Updated: 11 Jan 2019 1:40 PM IST)
பெண்கள் குறித்து ராகுல், பாண்டியா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தெரிவித்தார். #INDvAUS #ViratKohli #HardikPandya #KLRahul
சிட்னி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. குறைந்தபட்சம் 2 போட்டியில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
அப்போது, பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கோலி, அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.
‘அணியில் மாற்றம் செய்தாலும் நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்தபிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்’ என்றார் கோலி.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvAUS #ViratKohli #HardikPandya #KLRahul

இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பைக்கு தயார் ஆவதே தங்களின் உடனடி கவனம் என்று தெரிவித்தார். மேலும், ஒரு குழுவாக தலைமை தாங்கி அணியை வழிநடத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருப்பதாகவும் கோலி கூறினார்.
அப்போது, பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கோலி, அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.
‘அணியில் மாற்றம் செய்தாலும் நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்தபிறகு, யாரை அணியில் சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்’ என்றார் கோலி.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvAUS #ViratKohli #HardikPandya #KLRahul
Next Story
×