search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்
    X

    எஞ்சிய 2 டெஸ்டில் ஆடக்கூடாது: ராகுலை திருப்பி அனுப்ப வேண்டும் - கவாஸ்கர் கடும் பாய்ச்சல்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் லோகேஸ் ராகுல் ஆடக்கூடாது என்றும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    அடிலெய்டில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 4 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    பெர்த் டெஸ்டில் கேப்டன் விராட்கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதன்மை சுழற்பந்து வீரரான ஜடேஜாவை சேர்க்காமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. அதனால் ஆஸ்திரேலியா ரன்களை வாரி குவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.



    மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீரர் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட் கைப்பற்றி மிகுந்த நெருக்கடியை கொடுத்தார்.

    இந்த நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.

    அணி வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.

    அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். சுமித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல இயலவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தேர்வு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.

    பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.

    முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.



    எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
    Next Story
    ×