search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் - பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது  மும்பை
    X

    புரோ கபடி லீக் - பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது மும்பை

    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி. #ProKabaddi #UMumba #BengalWarriors
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் யு மும்பை அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 14 - 9 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் போராடினர். ஆனாலும், மும்பை அணி வீரர்கள் அபாரமாக ஆடினர்.

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #UMumba #BengalWarriors
    Next Story
    ×