என் மலர்
செய்திகள்

பிரித்வி ஷா
பிரித்வி ஷா களம் இறங்குவது எப்போது?
இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 3வது டெஸ்டில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. #PrithviShaw #AUSvIND
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
பயிற்சி கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை.
அவரது காயத்தன்மை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘பிரித்வி ஷா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இப்போது நடக்கிறார். இந்த வார இறுதிக்குள் ஓட ஆரம்பித்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும்.
2-வது டெஸ்டுக்கு முன்பாக அவரது காயம் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது என்பதை பார்த்து அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்’ என்றார். 19 வயதான பிரித்வி ஷா மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. #PrithviShaw #AUSvIND

Next Story