என் மலர்

  செய்திகள்

  இரண்டாவது டி20 போட்டி- மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
  X

  இரண்டாவது டி20 போட்டி- மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. #AUSvIND
  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

  இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.

  ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 132 எடுத்தது. அப்போது மழை பெய்யததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என
  தெரிவிக்கப்பட்டது.  ஆனால் மழை விடுவது வருவதுமாக இருந்தது, இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக 5 ஓவருக்கு 46 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

  இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 25-ம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும். #AUSvIND 
  Next Story
  ×