என் மலர்
செய்திகள்

புரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது ஜெய்ப்பூர்
புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
லக்னோ:
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியில் அரியானா அணி 20 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், அரியானா அணியை 38 - 32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi
Next Story






