என் மலர்
செய்திகள்

தொடர்ந்து ஏழு டி 20 தொடர்களில் வெற்றி பெற்று அசத்திய இந்தியா
உள்நாடு, வெளிநாடு என இருபது ஓவர் போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தி வருகிறது. #INDvWI
லக்னோ:
இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற டி 20 போட்டியில் தொடர்ந்து ஏழு தொடர்களில் இந்தியா வெற்றி பெற்று அசத்தி வருகிறது.
நியூசிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும், இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டிராபியையும், அயர்லாந்துடனான தொடரை 2-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்துடனான தொடரை 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீசுடனான தொடரை 2-0 எனவும் கைப்பற்றி அசத்தியுள்ளது. #INDvWI
Next Story