என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் சீசன் 2019- ஷிகர் தவானுக்காக மூன்று வீரர்களை கொடுக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்
  X

  ஐபிஎல் சீசன் 2019- ஷிகர் தவானுக்காக மூன்று வீரர்களை கொடுக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற உள்ளார். அவருக்கு மூன்று வீரர்களை விடுவிக்கிறது. #IPL2019
  ஐபிஎல் 2019 சீசனுக்கான ஆயத்த பணிகளை அணிகள் மேற்கொண்டு வருகிறது. வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் மும்பை அணிக்கு செல்ல இருக்கிறார். மந்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு செல்ல இருக்கிறார்.

  இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வந்த ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுக்கிறது.  தவானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதேவேளையில் டெல்லி டேர்டெவில்ஸ் விஜய் ஷங்கர், நதீம் ஆகியோரை தலா 3.2 கோடி ரூபாய்க்கும், அபிஷேக்கை 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.
  Next Story
  ×