search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம்- ரகானே
    X

    மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம்- ரகானே

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று ரகானே தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இருந்தனர். இந்த நீண்ட கால பட்டியலில் தற்போது வெட்டு விழுந்ததுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரின்போதே முரளி விஜய் நீக்கப்பட்டார்.

    இருவருக்கும் பதில் உள்ளூர் தொடர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இருவரில் ஒருவர் லோகேஷ் ராகுல் உடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வைத்துதான் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.



    இந்நிலையில் புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இது அவர்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு.

    ப்ரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் சிறுவனாக இருக்கும்போதே நான் பார்த்திருக்கிறேன். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூர் தொடரிலும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் ப்ரித்வி ஷா விளையாடிய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், எங்களுடைய ஆட்டம் மேம்படைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம். எதிரணியை பார்ப்பதைவிட எங்களுடைய முக்கிய திட்டம், சிறப்பான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான்.

    தனிப்பட்ட முறையில் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிறந்த பயிற்சி’’ என்றார்.
    Next Story
    ×