search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி நன்னடத்தை விதியை மீறிய ரஷித் கானுக்கு 15 சதவீதம் அபராதம்
    X

    ஐசிசி நன்னடத்தை விதியை மீறிய ரஷித் கானுக்கு 15 சதவீதம் அபராதம்

    வீரர்களின் நன்னடத்தை விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கானுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. #AsiaCup2018 #RashidKhan
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், சுழற்பந்து வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஹசன் அலி ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது.


    ஹசன் அலி

    பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்து செல்லும்போது ரஷித் கான் அவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலியை வேண்டும் என்றே தோளோடு தோள் உரசி சென்றார். பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ஹஸ்மத் துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை செய்தார்.


    அஸ்கர்

    இவை ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆட்ட ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
    Next Story
    ×