search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா தொடரில் இந்த நான்கு பேரும் இந்தியாவிற்கு சவாலாக இருப்பார்கள்- இயன் சேப்பல்
    X

    ஆஸ்திரேலியா தொடரில் இந்த நான்கு பேரும் இந்தியாவிற்கு சவாலாக இருப்பார்கள்- இயன் சேப்பல்

    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×