என் மலர்

  செய்திகள்

  இந்தியாவிற்கு எதிராக 10 முறை சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்- பாகிஸ்தான் பவுலர்
  X

  இந்தியாவிற்கு எதிராக 10 முறை சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்- பாகிஸ்தான் பவுலர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக 10 முறை சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். #INDvPAK
  ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

  இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த நம்பிக்கையில் பாகிஸ்தான் களம் இறங்குகிறது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஹசன் அலி திகழ்கிறார்.

  இவர் இந்தியாவிற்கு எதிராக 10 முறை விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களை விட நாங்கள்தான் டாப். சாம்பியன்ஸ் டிராபியில் அப்படித்தான் அவர்களை தோற்கடித்தோம்.  இந்தியாவிற்கு எதிராக விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தும் என்னுடைய ஸ்டைலை 10 முறை செய்ய விரும்புகிறேன். ஆனால், என்ன நடக்க இருக்கிறதை என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்’’ என்றார்.
  Next Story
  ×