என் மலர்

  செய்திகள்

  டேபிள் டென்னிஸ்- சரத்கமல், சத்தியன், மனிகா பத்ரா தோல்வி
  X

  டேபிள் டென்னிஸ்- சரத்கமல், சத்தியன், மனிகா பத்ரா தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியைவை சேர்ந்த சரத்கமல், சத்தியன், மனிகா பத்ரா தோல்வி அடைந்தனர். #asiangames #tabletennis #sharathkamal
  ஜகார்தா:

  ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன.

  இதில் இந்திய வீரர் சரத்கமல் சீனதைபேயின் சியுயாக் சுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை சரத்கமல் 7-11 என்ற செட் கணக்கில் இழந்தார்.

  2-வது செட்டை அவர் 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3-வது செட்டை (10-12)பறிகொடுத்த சரத்கமல் 4-வது செட்டில் கடுமையாக போராடினார். இதில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் அந்த செட்டை சரத்கமல் 16-14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சரத்கமல் 9-11 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.

  இதனால் 3-2 என்ற கணக்கில் சீனதைபே வீரர் வெற்றி பெற்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சத்தியன், ஜப்பாக் வீரர் மாட்சுடை ராவுடன் தோல்வியடைந்தார்.  இதேபோல் பெண்களுக்கான ஒற்றை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா, சீனாவின் மன்யூவுடன் தோல்வியடைந்தார். #asiangames #tabletennis #sharathkamal
  Next Story
  ×