என் மலர்

  செய்திகள்

  டேன் பேட்டர்சன்
  X
  டேன் பேட்டர்சன்

  ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா ‘ஏ’ அணியை 157 ரன்னில் சுருட்டி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ எளிதில் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி அபார பந்து வீச்சால் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
  இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

  இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் சூர்ய குமார் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

  சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும், ஈஸ்வரன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடக்க ஜோடி சொதப்பியதால், அதன்பின் வந்த முன்னணி வீரர்களால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யர் (7), அம்பதி ராயுடு (19), நிதிஷ் ராணா (19), குருணால் பாண்டியா (5) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.


  கலீல் அஹமது

  அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 36 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 38 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 37.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 157 ரன்களில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேன் பேட்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

  பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் குளேயெட் (24), பீட்டர் மலன் (47), சரேல் எர்வீ (20) சிறப்பான தொடக்கம் கொடுக்க 37.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
  Next Story
  ×