என் மலர்

  செய்திகள்

  மயாங்க் அகர்வால்
  X
  மயாங்க் அகர்வால்

  நான்கு அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இந்தியா ‘பி’யை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ஏ அணிகள் வெற்றி பெற்றன.
  இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன, ஒரு ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின.

  டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ ரன் குவிக்க திணறியது. அம்பதி ராயுடு 48 ரன்னும், சஞ்சு சாம்சன் 32 ரன்னும், கிருஷ்ணப்பா கவுதம் 35 ரன்களும் அடிக்க 49 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ‘பி’ அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘பி’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 114 பந்தில் 124 ரன்கள் குவித்தார். இளம் வீரர் ஷுப்மான் கில் 42 ரன்கள் அடிக்க இந்தியா ‘பி’ 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


  டிராவிஸ் ஹெட்

  மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ டிராவிஸ் ஹெட் (110), மார்கஸ் லபுஸ்சேக்னே (65), ஆர்கி ஷார்ட் (49), ரென்ஷா (42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது.

  பின்னர் 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கிஹான் (50), கயா சோண்டா (117) ஆகியோர் சிறப்பான ஆடினாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ 48.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  Next Story
  ×