search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இந்திய ‘ஏ’, ‘பி’ அணியில் இடம்
    X

    அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இந்திய ‘ஏ’, ‘பி’ அணியில் இடம்

    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ‘ஏ’ மற்றும் ‘பி’ அணியில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவிற்கு இடம் கிடைத்துள்ளது.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
    Next Story
    ×