search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீச்சல் போட்டி- இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி
    X

    நீச்சல் போட்டி- இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி

    ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. #AsianGames2018 #Swimming
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நீச்சல் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடந்தன. ஆண்களுக்கான 4x100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே பிரிவில் டிசோசா, அன்ஷுல், சாஜன் பிரகாஷ், விர்தால்காடே ஆகியோரை கொண்ட இந்திய அணி தகுதி சுற்றில் (3 நிமிடம் 25.17 வினாடி) 8-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் மணிஅபினேஷ் 56.98 வினாடியிலும், மற்றொரு இந்திய வீரரான சாஜன் பிரகாஷ் 54.06 வினாடியிலும் பந்தய தூரத்தை கடந்தனர்.

    ஆனால் இது இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதியாக இல்லை. சாஜன் பிரகாஷ் 12-வது இடமும், மணிஅபினேஷ் 26-வது இடமும் பிடித்தனர். இதன்மூலம் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    இதேபோல் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ரோக் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் (1 நிமிடம் 2.07 வினாடி) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. அவர் தகுதி சுற்றில் 10-வது இடத்தை பிடித்தார்.

    டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா- ஹாங்காங்கின் சாங்வாங்குடன் மோதினார்.

    இதில அங்கிதா ரெய்னா 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அங்கிதா ரெய்னா பதக்கத்தை உறுதி செய்தார். #AsianGames2018 #Swimming
    Next Story
    ×