search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிப்பார்- மிட்செல் ஸ்டார்க்
    X

    ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிப்பார்- மிட்செல் ஸ்டார்க்

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பியதும் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். #Smith
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இவர் கடந்த 32 மாதமாக டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் இருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும், வார்னருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதித்தது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் அடித்தார். ஒரே டெஸ்டில் 200 ரன்கள் அடித்ததால் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்நிலையில் ஸ்மித் சர்வதேச போட்டிக்கு திரும்பிய பின்னர், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று சக வீரரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆன மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக ஸ்டீவ் ஸ்மித் எப்படி விளையாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கடுமையாக விளையாடக் கூடியவர். மற்ற எந்த வீரரையும் விட அதிக பந்துகளை சந்திக்கக் கூடியவர். அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கக் கூடியவர்.

    ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பி, அவர்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் அடித்து உலக பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்குவார்கள். இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×