என் மலர்

  செய்திகள்

  வருமான வரி செலுத்துவதிலும் அசத்திய தல டோனி
  X

  வருமான வரி செலுத்துவதிலும் அசத்திய தல டோனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். #MSDhoni #Incometax
  ராஞ்சி:

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி.

  கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இரண்டு உலக கோப்பையை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  இந்த நிலையில் பீகார்- ஜார்க்கெட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் டோனி முதல் இடத்தை பிடித்தார். 2017-18ம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் கட்டியுள்ளார். இதை பீகார்- ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை இணை கமி‌ஷனர் நிஷாஒரான் தெரிவித்துள்ளார்.

  கடந்த நிதியாண்டை விட ரூ.1.24 கோடி கூடுதலாக டோனி வருமானவரி கட்டியுள்ளார். 2016-17ல் அவர் ரூ.10 கோடியே 93 லட்சம் வரி செலுத்தி இருந்தார்.  டோனி 2013-14ம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.

  பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான டோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni #Incometax
  Next Story
  ×