search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் 126 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா
    X

    இலங்கை சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் 126 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா

    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கருணாரத்னே தனிஒருவராக நின்று 158 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 287 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ரன்னுடனும், மகாராஜ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.



    டீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 51 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், ஹெராத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை விட 161 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×