search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது டி20 கிரிக்கெட் - இங்கிலாந்து வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    இரண்டாவது டி20 கிரிக்கெட் - இங்கிலாந்து வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    கார்டிஃபில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND
    கார்டிஃப்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முன்னணி வீரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார்.



    அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 32 ரன்களும், பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. #ENGvIND #EnglandvIndia
    Next Story
    ×