search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு டி20 தொடர் - இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்ரிக்கா
    X

    முத்தரப்பு டி20 தொடர் - இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்ரிக்கா

    இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி, இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #WomenT20Triseries #ENGvRSA #RSAvENG

    இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேனியேலி வையட், டம்மி பியூமோண்ட் ஆகியோர் களமிறங்கினர். வையட் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சாரா டெய்லர் களமிறங்கினார். பியூமோண்ட் சிறப்பாக விளையாடினார்.

    சாரா டெய்லர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த நடாலி ஸ்சீவர் 16 ரன்னிலும், கேத்ரின் பர்ண்ட் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பியூமோண்ட் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். அரைசதம் கடந்த பியூமோண்ட் 59 பந்தில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டாகி வெளியேறினார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஹீதர் நைட் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில், ஜிண்டில் மாலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிச்செலி லீ, லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அதன்பின் சுன் லூஸ் களமிறங்கினார்.அவர் லீயுடன் இணைந்து ரன் குவித்தார். 

    சிறப்பாக விளையாடிய லீ அரைசதம் அடித்தார். அவர் 37 பந்தில் 68 ரன்கள் (4 பவுண்டரி, 6 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் டேன் வான் நைகெர்க் களமிறங்கினார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரியான் 1 ரன்னில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மிக்னான் டு ப்ரீஸ் களமிறங்கினார்.

    ஒரு கட்டத்தில் தென்னாப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிவந்த சுன் லூஸ் அரைசதம் அடித்தார். தென்னாப்ரிக்கா அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுன் லூஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 52 பந்தில் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அன்யா ஷ்ரப்சோலே, சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #WomenT20Triseries #ENGvRSA #RSAvENG
    Next Story
    ×