search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபடி மாஸ்டர்ஸ் தொடர்- அறிமுக ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
    X

    கபடி மாஸ்டர்ஸ் தொடர்- அறிமுக ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

    துபாயில் இன்று தொடங்கிய கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு அஜய் தாகூர் தலைமை தாங்கினார். இந்த போட்டியை காண பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சென்றிருந்தார்.

    இதில் இந்தியா டாஸ் வென்றது. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை அவுட் ஆக்கினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. பாகிஸ்தான் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் ஒரு இந்திய வீரரை கூட பிடிக்கவில்லை.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பாகிஸ்தான் சற்று சுதாரிப்புடன் விளையாடியது. இருப்பினும் இந்திய வீரர்கள் அதற்கு ஈடுகொடுத்து விளையாடினர். இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 14 புள்ளிகளும், பாகிஸ்தான் 11 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.



    இதை தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஈரான் - தென்கொரியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா நாளை தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND
    Next Story
    ×