search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஸ் என்றால் விளையாடு, தோல்வி என்றால் புறப்படு- ரவிசாஸ்திரி
    X

    பாஸ் என்றால் விளையாடு, தோல்வி என்றால் புறப்படு- ரவிசாஸ்திரி

    யோ-யோ டெஸ்டில் பாஸ் என்றால் இந்திய அணியில் இடம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி. #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உடற்தகுதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் யோ-யோ டெஸ்ட் என்ற முறையை கையாண்டு வருகிறது.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.

    யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.



    புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×