search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று மைதானங்களில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில்- நஜம் சேதி
    X

    மூன்று மைதானங்களில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில்- நஜம் சேதி

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8 ஆட்டங்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பிசிபி சேர்மன் நஜம் சேதி தெரிவித்துள்ளார். #PSL
    இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் வந்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயம் அடைந்தார்கள். இதனால் தொடரை பாதிலேயே ரத்து செய்துவிட்டு இலங்கை அணி வெளியேறியது.

    அதன்பின் முன்னணி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது.

    தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்களது சொந்த மைதானமாக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதேவேளையில் ஐக்கிய அரபு எமிடேஸில் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடைபெற இருக்கின்றன.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடருக்கு மைதானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த அநாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிகள் மற்றும் பிளேஃஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.



    இந்நிலையில் அடுத்த சீசனில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் உள்ள மூன்ற மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாகூர் மற்றும் கராச்சி மைதானங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். மூன்றாவது மைதானம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×