search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலாவின் உடற்தகுதி உறுதியாக நிலையில் ரஷியா வந்தடைந்தது எகிப்து அணி
    X

    சாலாவின் உடற்தகுதி உறுதியாக நிலையில் ரஷியா வந்தடைந்தது எகிப்து அணி

    முகமது சாலாவின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷியா வந்தடைந்தது எகிப்பு அணி. #WorldCup2018
    பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்பு அணி கடைசியாக 1990-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் 28 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது முகமது சாலா தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    அதன்படி பார்த்தால் வருகிற 15-ந்தேதி உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாலாவுடன் எகிப்பு அணி நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ரஷிய வந்தடைந்துள்ளது. சாலா அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர் உருகுவே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.



    இதுகுறித்து எகிப்பு அணி டாக்டர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த வாரம் தொடக்கத்தில் முகமது சாலாவின் காயம் குறித்து மதிப்பீடு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழுவதும் குணமடையும் முன்பு, விளையாட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

    எகிப்து அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘எங்கள் அணி போட்டியில் களம் இறங்க தயாராக இருக்கிறது. மனஉறுதியைில் அதிகமாக உள்ளது’’ என்றார்.

    ‘ஏ’ பிரவில் இடம்பிடித்துள்ள எகிப்பு 15-ந்தேதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி ரஷியாவையும், 25-ந்தேதி சவுதி அரேபியாவையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×