என் மலர்

  செய்திகள்

  இண்டர்காண்டினெண்டல் கோப்பை - லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
  X

  இண்டர்காண்டினெண்டல் கோப்பை - லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியுடனான கால்பந்து போட்டியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup

  புதுடெல்லி:

  இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கென்யாவை 3-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 62-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.   அதைத்தொடர்ந்து 49-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டி ஜாங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 86-வது நிமிடத்தில் டயர் நியூசிலாந்து அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் இந்திய அணியினர் எவ்வளவு முயன்றும் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup 
  Next Story
  ×